பிலிப்பைன்ஸ் நாட்டில் கோரதாண்டவமாடிய புயல் - பலி எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது
பிலிப்பைன்ஸ் நாட்டில் 'மெகி' என்கிற சக்தி வாய்ந்த புயல் கடுமையாக தாக்கியதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 புயல்கள் தாக்குவதால் அங்கு கடுமையான சேதங்களை ஏற்படுட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை 'மெகி' என்கிற சக்தி வாய்ந்த புயல் கடுமையாக தாக்கியது.
இந்த புயல் பிலிப்பைன்ஸின் பல மாகாணங்களை புரட்டி போட்ட நிலையில் மத்திய மாகாணமான லெய்டே கடுமையான பாதிப்பை எதிர்க் கொண்டுள்ளது. புயலுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் லெய்டே மாகாணம் முழுவதும் வெள்ளகாடாக காட்சியளிக்கிறது. கனமழை, வெள்ளம் காரணமாக அங்குள்ள பேபே நகரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.
இதனால் பொதுமக்கள் மண்ணில் புதைந்தனர். இதில் சிக்கி 25 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 193 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும். இதன் காரணமாக பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan