மாண்டஸ் புயலை தொடர்ந்து மீண்டும் புதிய புயல் - எப்போது தெரியுமா?

Chennai TN Weather Weather Mandous Cyclone
By Thahir Dec 10, 2022 03:26 PM GMT
Report

மாண்டஸ் புயல் நேற்று சூறாவளி காற்றுடன் கரையை கடந்து சென்ற நிலையில் மீண்டும் புதிய புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் மீண்டும் வரும் 13-ஆம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மேலடுக்கு சுழற்சி டிசம்பர், 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் தீவிரமடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயலை தொடர்ந்து மீண்டும் புதிய புயல் - எப்போது தெரியுமா? | Storm Mantus Is Followed By A New Storm

மேலும் மாண்டஸ் புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்த நிலையில் வேலூருக்கு 30 கி.மீ. தொலைவில் 9 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.

இது கிருஷ்ணகிரிக்கு கிழக்கு வடகிழக்கில் 120 கி.மீ. தூரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கிறது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.