புயல் பாதிப்புக்கு உதவ தயார் : உதவி எண் அறிவித்த அண்ணாமலை
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி எண்ணை அறிவித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
மாண்டாஸ் புயல்
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்றிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்த மாண்டஸ் புயல் காரணமாக 300க்கும் மேற்பட்ட மரங்கள், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
அண்ணாமலை உதவி எண்கள் அறிவிப்பு
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய பாஜக தொண்டர்கள் தயாராக உள்ளனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதன்படி, உதவிக்கு 9150021831, 9150021832, 9150021833 என்ற எண்களில்அழைக்கலாம் எனவும் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.