தமிழில் பெயர் பலகை..வணிகர்கள் அதை செய்ய வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

By Swetha Jul 23, 2024 07:29 AM GMT
Report

கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க முன்வரவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஸ்டாலின் கோரிக்கை

நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் வணிகர்கள் நலனுக்காக ‘வணிகர்கள் நலவாரியம்’அமைக்கப்பட்டுள்ளது. அதன் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்த வாரியத்தை மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உருவாக்கினார்.

தமிழில் பெயர் பலகை..வணிகர்கள் அதை செய்ய வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை! | Stores Name In Tamil Stalin Urges Traders

தற்போது வரை இந்த வாரியத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 88,210 ஆக உயர்ந்துள்ளது. அடுத்த வாரிய கூட்டத்துக்குள் இந்த வாரியத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று வாரிய உறுப்பினர்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன்.

திமுக அரசு அமைந்த பின் வாரியம் மூலம் நலத்திட்ட ங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. குடும்ப நல நிதியும் உயர்த்தப்பட்டு 390 பேர் குடும்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. அரசு பொறுப்பேற்றது முதல் 8883 வணிகர்கள் பல்வேறு நிதியுதவிகள் பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் உதவி தமிழ்நாட்டுக்கு தேவை - முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை..!

மத்திய அரசின் உதவி தமிழ்நாட்டுக்கு தேவை - முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை..!

தமிழில் பெயர் பலகை..

வருங்காலத்தில் பல்வேறு முன்னெடுப்புகளை செய்ய தயாராக உள்ளோம். சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகளால் கடைகளுக்கு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் உரிமங்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழில் பெயர் பலகை..வணிகர்கள் அதை செய்ய வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை! | Stores Name In Tamil Stalin Urges Traders

நகர்ப்புற உள்ளாட்சிகளில் 9 ஆண்டுகள் இருந்ததை 12 ஆண்டுகள் என விதிகள் திருத்தப்பட்டுள்ளது. வணிகர்கள் நீங்களே முன்வந்து தமிழில் பெயர் பலகைகளை மாற்ற முன்வரவேண்டும். மிகப்பெரிய தொழிற்சாலைகள் மட்டுமின்றி, சிறு கடைகளும்,

வியாபாரிகளும் தங்கள் வணிகத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதில் அரசு அக்கறை கொண்டுள்ளது. சிறு வணிகர்களும், நிறுவனங்களும் நிதி வளர்ச்சிக்கு மட்டுமல்ல; மனித வளர்ச்சிக்கும் அடிப்படையானவை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.