சிகரெட் கொடுக்க மறுத்த கடைக்காரர் அடித்துக் கொலை; இளைஞர்கள் வெறிச்செயல்!

attack killed 3 youngsters
By Anupriyamkumaresan Jul 22, 2021 08:00 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

மதுரை அருகே சிகரெட்டை கடனாக கொடுக்க மறுத்த கடைக்காரர் அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சமத்துவபுரத்தில் வினோத் என்பவர் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். அவரது கடைக்கு வந்த அருண்பாண்டி, கார்த்திக், ஜோதிமணி ஆகிய மூன்று இளைஞர்கள் சிகரெட்டை கடனாக தருமாறு கேட்டுள்ளனர்.

சிகரெட் கொடுக்க மறுத்த கடைக்காரர் அடித்துக் கொலை; இளைஞர்கள் வெறிச்செயல்! | Store Man Attack Killed By 3 Youngsters

அதற்கு வினோத் மறுப்பு தெரிவித்து, ஏற்கனவே இருக்கும் கடனை கொடுத்துவிட்டு சிகரெட் வாங்கிச் செல்லுமாறு கடுமையாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். கொடூரமாக தாக்குதல் நடத்திய இளைஞர்களிடமிருந்து கடைக்காரரை மீட்ட பொதுமக்கள், ஆம்புலன்ஸ் உதவியோடு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சிகரெட் கொடுக்க மறுத்த கடைக்காரர் அடித்துக் கொலை; இளைஞர்கள் வெறிச்செயல்! | Store Man Attack Killed By 3 Youngsters

ஆனால், படுகாயமடைந்த வினோத்தோ மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தாக்குதல் நடத்திய 3 இளைஞர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.