இலங்கை மக்களுக்கு விசா வழங்குவது நிறுத்தம்? இந்திய துாதரகம் மறுப்பு

Sri Lankan Peoples Government Of India
By Thahir May 13, 2022 09:24 PM GMT
Report

இலங்கை மக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தவில்லை என்று இந்திய துாதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்,

கொழும்புவில் உள்ள இந்திய துாதரகம் இலங்கை மக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்திவிட்டதாக வெளியான அறிவிப்பு இந்திய துாதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய துாதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில்,இலங்கை குடிமக்களான எமது விசா பிரிவு ஊழியர்கள் கடந்த கடந்த சில நாட்களாக அலுவலகத்திற்கு வர முடியாத காரணத்தால் விசா செயற்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டன.

இந்த செயல்பாடுகளை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கு இலங்கை மக்களின் பயணத்தை எளிதாக்குவதற்கு உறுதிபூண்டுள்ளதாக கூறியுள்ள தூதரகம், இந்தியர்கள் இலங்கையில் இருப்பது போல் இலங்கை மக்களும் இந்தியாவில் வரவேற்கப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளது.