சிறுநீரகத்திலிருந்த கற்களைக் கொண்டு Stonehenge சிற்பத்தை உருவாக்கிய நபர்...!

Viral Photos England
By Nandhini Jan 11, 2023 01:12 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இங்கிலாந்தைச் சேர்ந்த சைமன் லு போகிட் என்ற கலைஞர், தனது சிறுநீரகத்தில் இருந்த கற்களைக் கொண்டு Stonehenge சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

சிறுநீரக கற்களால் சிற்பத்தை உருவாக்கிய நபர்

லிங்கன்ஷயர் கலைஞரான சைமன் லு போகிட் என்பவர் ஒரு தனித்துவமான மினியேட்டரை உருவாக்கியுள்ளார். அவரது உடலிலிருந்து சிறுநீரகக் கற்களை பல ஆண்டுகளாக சேகரித்து வைத்துள்ளார்.

அந்த சிறுநீரக கற்களைக் கொண்டு இங்கிலாந்து வரலாறுச் சின்னமாக ஸ்டோன்ஹெஞ்சின் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். இதனையடுத்து, அவுட்சைட் இன் ஆர்ட்ஸ் தொண்டு நிறுவனத்தால் இந்த சிறுநீரகக் கற்களிலிருந்து உருவாக்கப்பட்ட ஸ்டோன்ஹெஞ்சை கண்காட்சியில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்ற கண்காட்சியில் இதனை காட்சிப்படுத்தி அவர் பாராட்டைப் பெற்றுள்ளார்.

stonehenge-from-kidney-stones-lincolnshire-artist