3 மாதத்தில் 6 சிலைகள்....மெரினாவில் அடுத்தடுத்து கிடைக்கும் கற்சிலைகள்...!
சென்னை மெரினா கடற்கரையில் பழங்கால கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா
சென்னை மாநகரின் முக்கிய சுற்றுலா தலமான சென்னை மெரினா கடற்கரையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பண்டையகால எச்சங்களாக அவ்வப்போது சில சிலைகளும், பொருட்களும் கிடைத்து வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக தற்போது சென்னை மெரினா கடற்கரையில் பழங்கால கற்சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெரினா கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள மணற்பரப்பில் புதைந்திருந்த 4 பழங்கால கடந்த வாரம் மீட்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு அடி உயரமுள்ள கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கண்டெக்கப்படும் கற்சிலைகள்
வழக்கம் போல காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இந்த சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிலையை மயிலாப்பூர் தாசில்தாரிடம் காவல் துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 3 மாதங்களில் தொடர்ச்சியாக இது போன்று 6 பழங்கால சிலைகள் மெரினா கடற்கரையில் கண்டுபுடிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.