35 ஆண்டுகளாக வயிற்றில் குழந்தையுடன் இருந்த 73 வயது மூதாட்டி - அதிர்ச்சி தகவல்

stonebaby கல் குழந்தை lithopedion
By Petchi Avudaiappan Jan 01, 2022 11:58 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

அல்ஜீரியாவில் 73 வயது மூதாட்டி ஒருவர் 35 ஆண்டுகளாக கருவில் சுமந்து வந்த கல் குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

அல்ஜீரியாவின் ஸ்கிக்டாவைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி ஒருவர் சமீபத்தில் வயிற்றில் வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது வயிற்றில் குழந்தை இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் அவரின் வயிற்றில் குழந்தை உருவாகி அந்த குழந்தை கல்லாக மாறியுள்ளது. கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக வயிற்றில் ஒரு கல் குழந்தையுடன் மூதாட்டி நடமாடி வந்துள்ளார்.சுமார் 2 கிலோ எடை கொண்ட இந்த கல் குழந்தை 7வது மாதம் வரை வளர்ச்சியடைந்து கல்லாக மாறியுள்ளது. மருத்துவ உலகில் இவ்வறான கருவை lithopedion என்று கூறுவது வழக்கம். அதாவது கருமுட்டையில் கரு உருவாகாமல் அடி வயிற்றில் கரு உருவானால் இத்தகைய நிலை ஏற்படும். 

ஆனால் அவ்வறாக உருவாகும் கரு ஒரிரு நாளில் தானாக வெளியேறிவிடும். அடி வயற்றில் ஏதாவது பாதிப்பு இருந்தால் அது உடனடியாக சிக்கலை ஏற்படுத்தும். இதுவரை உலகில் அதிகாரப்பூர்வமாக 290 பேருக்கு தான் இப்படியாக லித்தோபிடியன் முறையில் கரு அவர்கள் வயிற்றில் வளர்ந்துள்ளது. இந்த மூதாட்டிக்கு கரு முட்டைக்குள் குழந்தை இல்லாததால் அவருக்கு அந்த காலத்தில் மாதவிடாயும் சரியாக இருந்துள்ளது. ஆனால் உடல் எடை மட்டும் கூடியுள்ளது. வயது முதிர்வின் காரணமாக கூடியிருக்கும் என அவர் கருதிய நிலையில் தற்போது தான் அது குழந்தை என தெரியவந்துள்ளது.