வயிற்று வலியால் வந்த சிறுமிக்கு பிரசவம் - குழந்தை பிறந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி!
பொள்ளாச்சி அருகே வயிற்று வலிக்காக மருத்துவமனை சென்ற 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அடுத்த கிராமத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி தனது தாயாருடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென வயிற்று வலியால் துடிதுடித்து சுருண்டு கீழே விழுந்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சாப்பாட்டு உடம்புக்கு சேரவில்லை என நினைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமிக்கு பிரசவம் பார்த்துள்ளனர். சிறுது நேரம் கழித்து குழந்தை பிறந்ததை உறவினர்களிடம் தெரிவித்துவிட்டு போலீசாரிடமும் தகவல் அளித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், வாயடைத்து இருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுமியிடன் மேற்கொண்ட விசாரணையில் மாற்று திறனாளி ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை தான் யாரிடமும் சொல்லாமல் மறைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த மாற்றுத்திறனாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது
செய்து சிறையில் அடைத்தனர்.