மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தையா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டாம்
இன்றைய காலத்தில் மலச்சிக்கல் என்பது பலர் அடிக்கடி அனுபவிக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளும், பழக்கவழக்கங்களும் தான் காரணம். ஒருவர் உடலுக்கு உழைப்பு ஏதும் கொடுக்காமல் உண்பது, உட்கார்ந்து வேலை செய்வது என்று இருந்தால், உணவுகள் சரியாக செரிமானமாகாமல், நாளடைவில் அது மலச்சிக்கலை உண்டாக்கும்.
அதிலும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளை சாப்பிடும் ஒருவர் மலச்சிக்கலால் அன்றாடம் அவதியாக நேரிடுகிறது. இந்த மலச்சிக்கல் பிரச்சனையை ஒருவர் ஆரம்பத்திலேயே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், பின் மூல நோய் வரக்கூடும். எனவே மலச்சிக்கலை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
தற்போது அவை என்னென்ன உணவுகள் என்பதை பார்ப்போம்.மைதா சேர்த்த உணவுகள் நிச்சயம் மலச்சிக்கலை உண்டாக்கும். மசாலா நிறைந்த அசைவ உணவுகளை தவிர்ப்பது நலம். தேவையான அளவு தண்ணீர் பருகாதது மலச்சிக்கலை உண்டாக்கும் மிக முக்கியக் காரணிகளாகும். நீங்கள் அடிக்கடி மலச்சிக்கல் அடைந்தால், அதிகப்படியான சீஸ் மற்றும் பால் காரணமாக இருக்கலாம்.
செரிமான அமைப்புக்கு நல்ல புரோபயாடிக்குகள், நேரடி பாக்டீரியாக்களுடன் தயிரை முயற்சிக்கவும். இது மலச்சிக்கலை போக்க உதவும். ஆயத்த உணவுகள் பெரும்பாலானவை மலச்சிக்கலை உண்டு பண்ணும்.
எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது. இறைச்சி புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த ஆனால் நார்ச்சத்து இல்லாத உணவுகள். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது. கேக்குகள் சாப்பிடவேண்டிய விஷயம். இதனை அடிக்கடி எடுக்க கூடாது.
இவை மலச்சிக்கலை உண்டாக்கும்.
வெள்ளை ரொட்டி இதில் அதிகமானவை கடினமான, உலர்ந்த மலத்தைத் தரும். இது குறைந்த ஃபைபர் வெள்ளை மாவுடன் தயாரிக்கப்படுகிறது.