திருடுபோன அம்மனின் தாலி திரும்ப கிடைத்த அதிசயம்

By Fathima Jul 20, 2026 07:57 AM GMT
Report

திரௌபதி அம்மன் கோவிலில் அம்மனின் 10 சவரன் தங்க தாலி திருடு போன நிலையில் திரும்ப கிடைத்த அதிசயம் நடந்துள்ளது.

ஆர்கே பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யனேரி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த ஞாயிறன்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு திரௌபதி அம்மன் மற்றும் பிற உற்சவர் சிலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.

பகல் நேரத்தில் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த தாலியை திருடிச் சென்றதாக தெரிகிறது.

திருடுபோன அம்மனின் தாலி திரும்ப கிடைத்த அதிசயம் | Stolen Draupadi Amman Thali Its Return By The God

சிறிது நேரம் கழித்து அம்மன் தாலி காணாமல் போனதை கண்ட கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

திங்களன்று காலை பூசாரிக்கு அருள் வந்து கோவிலை சுற்றி ஓடினார், பின்புறத்தில் தாலி இருந்தது, இதைக்கண்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டனர்.