ஒரே நாளில் ரூ.4.47 லட்சம் கோடி இழப்பு - பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

By Petchi Avudaiappan May 06, 2022 09:16 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in வணிகம்
Report

மும்பை பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்ததால்  ஒரே நாளில் ரூ.4.47 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 866.65 புள்ளிகள் வீழ்ச்சிகண்டு 54 ஆயிரத்து 835.58 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. முன்னதாக வர்த்தகத்தில் பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்செர்வ், நெஸ்லே, விப்ரோ, ஹெச்டிஎஃப்டி, இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக வீழ்ச்சியை சந்தித்தன. 

அதேசமயம் டெக் மஹிந்திரா, பவர்கிரிட், ஐடிசி, எஸ்பிஐ, என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்தது. இந்த வீழ்ச்சிக்கான காரணமாக சர்வதேச சந்தைகளில் வீழ்ச்சி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றது, அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை போன்றவை பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.