பிரசவம் முடிந்த பெண்ணின் கருப்பையையும் குடலையும் சேர்த்து தையல் போட்ட மருத்துவர்கள்
கடலூரில் பிரசவம் முடிந்த கையோடு கருப்பையுடன் குடலையும் சேர்த்து தையல் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம்
கடலூர் அரசு மருத்துவமனையில் பிரசவ பிரிவில் கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் பகுதியைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் மகப்பேறு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
இந்நிலையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பத்மாவதி வயிற்றில் இருந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலமாக வெளியே எடுத்துள்ளனர் .
அறுவை சிகிச்சை முடிந்த பிறகு பத்மாவதி வயிறு தொடர்ந்து வந்துள்ளதாகவும் இதுகுறித்து மருத்துவ நிர்வாகம் சரியாக பதில் அளிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது .
குடலை சேர்த்து வைத்து தைத்த மருத்துவர்கள்
இதையடுத்து மகப்பேறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பத்மாவதியின் உறவினர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஜிப்மர் மருத்துவர்கள் பரிசோதித்ததில் அறுவை சிகிச்சை முடிந்த கையோடு தையல் போடும் போது மருத்துவர்கள் கருப்பையையும் குடலையும் ஒன்றாக சேர்த்து தைத்திருப்பது தெரியவந்தது.
பொதுமக்கள் அதிர்ச்சி
இதைத் தொடர்ந்து மீண்டும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது, சிகிச்சை முடிந்த உடனேயே பத்மாவதிக்கு வயிறு உப்பிய நிலையில் இது குறித்து அங்கிருந்த மருத்துவர்கள் சரியாக பதில் அளிக்காததால் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.
இது போல் இனி வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்பது தான் இவர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க வந்த தென்னைக்கு சரியாக சிகிச்சை அளிக்காமல் விட்ட மருத்துவர்களின் செயல்கள் கடலூரில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.