அதிகாலையில் வாக்குபதிவு இயந்திரங்களுடன் வந்த கண்டெய்னரால் பரபரப்பு
தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்துக்கு, வாக்குபதிவு இயந்திரங்களுடன் அதிகாலையில் கண்டடெய்னர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்ததும், அந்தந்த மாவட்டங்களில் வாக்குபதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், வாக்கு பதிவு இயந்திரங்கள் அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் 5 கண்டெய்னர் லொறிகளுடன் வாக்கு பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
இதனையறிந்த திமுகவினர் சந்தேகமடைந்து கேள்வி எழுப்ப, அவை அனைத்து பழுதான வாக்குபதிவு இயந்திரங்கள் என்றும், வாக்குபதிவுக்காக கூடுதலாக வைக்கப்பட்டவை எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதனையடுத்து போராட்டம் நடத்திய திமுகவினரிடம், மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்த பின்னரே திமுகவினர் கலைந்து சென்றது குறிப்பிடத்தக்கது.