பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து, குச்சியால் கொடூரமாக தாக்கிய கொடூரம் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!
புதுடெல்லியில் பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து, குச்சியால் கொடூரமாக தாக்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெண்ணை குச்சியால் தாக்கிய கொடூரம்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், புதுடெல்லியில் நேற்று ஒரு பெரிய கூட்டத்தில் பெண் ஒருவர் மீது செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. பிறகு ஒரு நபர் பெரிய குச்சியை கொண்டு வந்த அந்த பெண்ணை சராமரியாக பொதுமக்கள் முன்னிலையில் தாக்குகிறார்.
இதை அக்கூட்டத்தில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

स्त्री को देवी मानने वाले पुरुषों की असल हकीकत ??सामने बेठी ज़िंदा लाशें #jaiBhim pic.twitter.com/mHom1Vcnre
— Anamika Gautam BSP (@Anamika78609341) January 1, 2023