எனக்கே விபூதி அடிக்க பாக்குறீயா? கோலியின் வீக் பாய்ண்டை தொட்ட ஸ்டீவ் ஸ்மித் - கொந்தளித்த ரசிகர்கள்
இந்திய கேப்டன் விராட் கோலியை உசுப்பேத்தி வெற்றி பெற நினைத்த ஸ்டீவ் ஸ்மித்தின் யுக்தியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 17ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடந்து வரும் சூழலில் அக்டோபர் 23ம் தேதி சூப்பர் 12 போட்டிகள் தொடங்குகின்றன.
இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியாக வரும் அக்டோபர் 24ம் தேதியன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்திய அணி பயிற்சி பெறுவதற்காக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றன.
இங்கிலாந்து அணியுடனான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்த இந்திய அணி, நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நல்ல தொடக்கத்தை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அஸ்திரேலிய அணியில் தொடக்கமே சரியில்லை. டேவிட் வார்னர் (1), கேப்டன் ஃபின்ச் (8), மிட்சல் மார்ஷ் (0) என அடுத்தடுத்து வெளியேறினர்.
இதன் பிறகு வந்த ஸ்டீவ் ஸ்மித் ( 57) மேஸ்வெல் ஜோடி (37) அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 25 பந்துகளில் 41 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்தது.
அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ராகுல் சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங்கே அதிரடியாக இருந்து கே.எல்.ராகுல் 39 ரன்கள் எடுத்து வெளியேற ரோகித் சர்மா 60 ரன்களுக்கு ரிட்டயர்ட் அவுட்டானார்.
பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் 38 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 14 ரன்களும் எடுக்க 17.5 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு வெற்றி பெற்றது.
இதனால் தொடர்ந்து 2 வெற்றிகளை பெற்று டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி ஃபுல் ஃபார்மில் களமிறங்குகிறது.
இந்நிலையில் இந்திய அணிதான் கோப்பையை வெல்லும் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
போட்டி முடிந்த பிறகு பேசிய அவர், இந்திய அணியில் பேட்டிங், பவுலிங் என அனைத்து இடங்களும் சரியாக பொருந்தி மிக பலமான அணியாக திகழ்கிறது.
மேலும் அங்கு போட்டியை வென்றுக்கொடுக்க கூடிய சீனியர் வீரர்கள் உள்ளனர். எனவே இந்த முறை இந்திய அணி தான் கோப்பை வெல்லும் என நினைக்கிறேன்.
இந்திய வீரர்கள் கடந்த ஒரு மாதமாக அமீரகத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளனர். எனவே இந்த களத்தை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர்களுக்கு தெரியும்.
எனக்கு ஐபிஎல்-ல் பெரிதாக விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் வலைப்பயிற்சியில் ஓரளவிற்கு பாடம் கற்றுக்கொண்டேன்.
பொறுத்திருந்து பார்க்கலாம் எனத் தெரிவித்தார். ஸ்டீவ் ஸ்மித்தின் இந்த கருத்திற்கு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஸ்மித்தின் வியூகம் இது.
விராட் கோலி கொஞ்சம் உசுப்பேத்திவிட்டால் ஆர்வக்கோளாறால் சொதப்புவார். எனவே அது தெரிந்துதான் வேண்டுமென்றே விராட் கோலியின் அணிதான் உலகக்கோப்பையை வெல்லும் என ஸ்டீவ் ஸ்மித் ஆசைக்காட்டி திசைத்திருப்புகிறார்.
இதனை இந்திய வீரர்கள் கண்டுக்கொள்ளாமல் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil

கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: வெடிக்கும் போராட்டங்கள் - ஆசிரியருக்கு எதிராக கல்வி அமைச்சின் அதிரடி IBC Tamil
