டி20 உலககோப்பை தொடரிலிருந்து விலகப்போகும் வீரர்! ரசிகர்கள் கவலை!
டி 20 உலககோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விலகப்போவதாக ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஸ்டீவ் ஸ்மித் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக மொத்தமாக 6 போட்டிகளில் விளையாடினார். 6 போட்டிகளில் விளையாடி 104 ரன்கள் அடித்தார். இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 26 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 111.83 ஆகும்.
தற்பொழுது ஸ்டீவ் ஸ்மித் நீண்ட நாட்களாகவே முழங்கை காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதாக கூறி இருக்கிறார். ஏப்ரல் மாதத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் விளையாடி கொண்டிருக்கும் பொழுது கூட, அவருக்கு முழங்கை காயம் இருந்ததாக தற்போது ஸ்டீவ் ஸ்மித் கூறியிருக்கிறார்.
நெடு நாட்களாகவே எனக்கு முழங்கையில் காயம் மற்றும் வலி அதிகமாக உள்ளது. டெல்லி அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பொழுது எனக்கு வலி இருந்து கொண்டே இருந்தது. அதன் காரணமாகவே ஒவ்வொரு நாள் இரவும் நான் மாத்திரை உண்டு கொண்டு தூக்கிச் செல்வேன்.
தற்பொழுது வலி அதிகமாக இருக்கும் காரணத்தால் மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிக்கு எதிராக நடக்க இருக்கும் சர்வதேச தொடர்களில் ஓய்வு எடுக்க உள்ளேன். என்னுடைய உடல் நலத்தை முன்னேற்றம் விதத்தில் இந்த ஓய்வு நாட்களை பயன்படுத்திக் கொள்ள இருக்கிறேன் என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியிருக்கிறார்.
மேலும் பேசிய அவர் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே எனக்கு முதல் பட்சமாக இருக்கும். அதனடிப்படையில் என்னுடைய காயம் உலக கோப்பை டி20 தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சரியாக விட்டால் நிச்சயமாக உலக கோப்பை டி20 தொடரில் நான் பங்கெடுத்து விளையாடுவேன்.
ஒருவேளை என்னுடைய உடல் நலத்தை மேம்படுத்த இன்னும் சிறிது நாட்கள் ஓய்வு தேவைப் பட்டால் நான் நிச்சயமாக உலக கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டேன் என்று அதிரடியாக கூறி இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடர், மிக முக்கியமான தொடராக நான் பார்க்கிறேன்.
அந்த டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் என்னுடைய உடல் நலத்தை முன்னேற்றுவதே தற்போது என்னுடைய முழு இலக்காகும்.
எனவே ஆஷஸ் டெஸ்ட் தொடருக்காக ஒருவேளை உலக கோப்பை டி 20 தொடரில் நான் விளையாட முடியாமல் போனால், அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன்
என்று ஸ்டீவ் ஸ்மித் இறுதியாக கூறி முடித்தார்.