நள்ளிரவில் ஸ்டீவ் ஸ்மித் செய்த செயல் - ஆதாரத்துடன் வெளியிட்ட மனைவி
ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் நள்ளிரவு 1 மணிக்கு செய்த விநோத விஷயம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலுமே ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இதனிடையே இந்த தொடரில் சாதிக்க ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் செய்த விஷயம் தான் பேசுப்பொருளாகியுள்ளது. 2வது டெஸ்ட் போட்டி ஓவலில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கான பரபரப்பில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளார். உடனடியாக தனது பேட்டை எடுத்து, அனைத்தும் சரியாக உள்ளதா, என்பதை பார்த்து பேட்டிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
தூக்க கலக்கத்தில் இதனை கண்டு பயந்துப்போன ஸ்மித்தின் மனைவி டேனி வில்லிஸ், அதனை வீடியோ எடுத்து தனது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டார். இதனையடுத்து அந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. ஒரு வீரர் இப்படியும் ஆர்வக்கோளாறாக இருப்பாரா என ஆச்சரியமடைந்துள்ளனர்.