காப்பாத்துங்க...காப்பாத்துங்க.. லிப்டில் சிக்கிக்கொண்ட ஆஸ்திரேலிய வீரரின் திக் திக் நிமிடங்கள் - நடந்தது என்ன?
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் லிப்டில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த மகிழ்ச்சியுடன் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாட ஆஸ்திரேலியஅணி வீரர்கள் குடும்பத்தினருடனும் சிட்னிக்கு சென்றுள்ளனர்.
இதனிடையே ஆஸி. அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், முன்னாள் கேப்டனுமான ஸ்மித் ஹோட்டலில் தங்கிய போது அங்கிருந்த லிஃப்டை பயன்படுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லிஃப்ட் பழுதாகி பாதியில் நிற்க ஸ்மித் மாட்டிக் கொண்டார்.
இந்த சம்பவத்தை அடுத்து, ஹோட்டல் ஊழியர்கள், அணி நிர்வாகிகள் பதற்றம் அடைந்தனர். லிஃப்ட் கோளாறை சரி செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டது. லிஃப்டின் கதவை திறக்க முயற்சி எடுக்கப்பட்டது. இதனால் ஸ்மித் கொஞ்சம் அச்சப்பட தொடங்கியது அவரது முகத்தில் தெரிந்தது.
இதனையடுத்து தன்னை அமைதிப்படுத்தி கொள்ள ஸ்மித் தனது செல்போன் மூலம் லிப்டில் வீடியோ எடுக்க தொடங்கினார். லிஃப்டை சுற்றிக்காட்டிய ஸ்மித் இன்ஸ்டாகிராமில் எதோ ஃபில்டரை வைத்து விளையாடினார். அப்போது ஸ்மித்தின் நண்பரும் , சக வீரருமான மார்னஸ் லாபஸ்சேங் லிஃப்ட் கதவின் இடுக்கு வழியில் மிட்டாய்களை ஸ்மித்துக்கு வழங்கினார்.
சுமார் 55 நிமிடத்திற்கு பிறகு லிஃப்டின் கதவு திறக்கப்பட்டது. லிஃப்டின் கதவு திறந்ததும் ஸ்மித் வெளியே வர அங்கிருந்தவர்கள் கைத்தட்டி வரவேற்றனர். இதனையடுத்த லிஃப்டில் சிக்கி கொண்ட தனது அனுபவத்தை ஸ்மித் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.