ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு லட்சம் நிதியுதவி!

protests sterlite case 1 lakh fund kanimoli mp
By Anupriyamkumaresan Jun 05, 2021 12:33 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

தூத்துக்குடி போராட்டத்தில் போலீசார் தாக்குதலில் காயமடைந்த 94 நபர்களுக்கு நாடாளுமன்ற எம்.பி.கனிமொழி நிதியுதவி வழங்கினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, வன்முறை வெடித்தது.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு லட்சம் நிதியுதவி! | Sterlitecase Protest 1 Lakh Fund Kanimoli Mp Give

இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேர் மற்றும் காயமடைந்த 16 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு லட்சம் நிதியுதவி! | Sterlitecase Protest 1 Lakh Fund Kanimoli Mp Give

அதன்படி பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஸ்டாலின் சமீபத்தில் பணிநியமன ஆணையை வழங்கினார்.

மேலும், தூத்துக்குடி போராட்டத்தில் போலீசார் தாக்குதலில் காயமடைந்த 94 நபர்களுக்கு முதல்வர் உத்தரவுப்படி, கனிமொழி எம்.பி. தலா ஒரு லட்ச ரூபாயும், வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் பலியான நபரின் தாயாருக்கு 2 லட்ச ரூபாயும் வழங்கினார்.

இதுகுறித்து கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், வெளியிட்டுள்ள பதிவில், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 94 பேரில், 93 பேருக்கு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த ரூபாய் 1 லட்சம் மற்றும் வேறு வழக்கில் கைதாகி மரணமடைந்தவரின் தாய்க்கு ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றேன் என தெரிவித்தார்.

மேலும், நிகழ்ச்சியில் அமைச்சர் கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், திரு. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.