ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ் - தமிழக அரசு
tamilnadu
sterlite
tutucorin
casewithdraw
By Anupriyamkumaresan
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான குறிப்பிட்ட சில வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட நபர்களுக்கு உயர்கல்வி, வேலை வாய்ப்பிற்கான தடையில்லா சான்று வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் போலீசாரால் கைது செய்யப்பட்டு காயங்கள், மன உளைச்சலுக்கு ஆளான 93 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.