ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நிச்சயம் தமிழக அரசு அனுமதி தராது- தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ்
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருந்த நிலையில், இன்று தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள், போராட்டக்குழுவினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர் .
இந்த கூட்டத்தில் பொதுமக்களில் சிலர், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்று கூறினாலும், போராட்டக்குழுவினர் மற்றும் பலவேறு தரப்பினரும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என கூறினார்.
சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திய அந்த ஆலை மூடப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் தற்போது தான் நிம்மதியாக உள்ளனர், எனவே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என போராட்டக்குழுவினர் கூறி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நிச்சயம் தமிழக அரசு அனுமதி தராது
தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.