ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டத்தின் நூறாவது நாளில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரழந்தனர், பலரும் காயமடைந்தனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. மறுபுறம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணையும் நடைபெற்று வந்தது.
அதில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது சரி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அந்த வழக்கை ஏப்ரல் மாதத்தில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் கோரிக்கை வைத்திருந்தது.
இந்நிலையில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து. ஆகஸ்ட் மாதம் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.