ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு: வாசலில் BAN கோலம்..கூரையில் கருப்புக்கொடி!

ban tamilnadu sterlite
By Irumporai Apr 29, 2021 04:45 AM GMT
Report

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின்னர் ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தீவிரமாக உள்ளதால் தற்காலிகமாக அதாவது நான்கு மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை பிரமாண பத்திரமாக உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தது தமிழக அரசு.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மக்கள் இன்றைக்கு கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு: வாசலில் BAN கோலம்..கூரையில் கருப்புக்கொடி! | Sterlite Plant Ban Door Black Flag

இதனால் ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் கருப்புக்கொடி கட்டியுள்ளனர் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் BAN ஸ்டெர்லைட் என்று கோலமிட்டுள்ளனர்

. இதனால் தூத்துக்குடியில் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.