ஸ்டெர்லைட் ஆலையினை ஜூலை 31 வரை திறக்க அனுமதி - உச்ச நீதிமன்றம்

sterlite supremecourt
By Irumporai Apr 28, 2021 07:32 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகமாகியுள்ளது.

இந்த நிலைஅயில், ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேதாந்தா நிறுவனம் அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இதுகுறித்து தமிழக அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஆலையை தற்காலிகமாக திறக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஜூலை 31 வரை மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை திறந்திருக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 31க்கு பிறகு அப்போதைய சூழலைப் பொறுத்து ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.