ஸ்டெர்லைட் ஆலையை எப்போது திறப்பீர்கள்?: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

central government highcourt sterlite questioned
By Praveen May 05, 2021 10:59 AM GMT
Report

 தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை எப்போது திறப்பீர்கள் என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடியான கேள்வியை எழுப்பியுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் வேறு மாநிலத்துக்கு திருப்பி அனுப்புவது, ரெம்டெசிவிர் மருந்து, தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பான பத்திரிகை செய்தியின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்னெடுத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது,அதில் தமிழகத்துக்கு 35 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகளும் புதுச்சேரிக்கு 5 ஆயிரத்து 100 மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டன.

மேலும் ஒவ்வொரு மாநிலத்தின் பாதிப்புகளை பொறுத்து ரெம்டெசிவிர் மருந்துகள் அனுப்பட்டதாகவும் இதில் எந்த ஒரு பாரபட்சமும் பார்க்கவில்லை எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 30ம் தேதிக்கு பிறகு அதாவது வழக்கு விசாரணைக்குப் பிறகு கொரோனா பரவலின் தாக்கம் மற்றும் படுக்கை வசதிகளும் போதுமான மருந்துகளும் கையிருப்பில் உள்ளதா என்ற அறிக்கை தெரிவிக்க தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுச்சேரியைப் பொறுத்தவரை இப்போதைக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

மேலும் தமிழகத்தில் மத்திய அரசு ஸ்டெர்லைட் ஆலையை எப்போது திறப்பீர்கள்? என உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு அதிரடி கேள்வியை எழுப்பியுள்ளது. இதனையடுத்து அரசிடம் உரிய பதிலைப் பெற்றுத்தருவதாக தெரிவித்ததை அடுத்து இந்த வழக்கானது நாளை மதியம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.