சிங்கப்பூரை தொடர்ந்து ஜப்பான் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஜப்பான் சென்றடைந்தார்.
முதலமைச்சர் பயணம்
ஜனவரியில் தமிழகத்தில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள முன்னணி தொழில் நிறுவன அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கவும், தமிழக்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சந்திப்புகளை நிகழ்த்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.
ஏற்கனவே 2 நாள் பயணமாக சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்ட முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அங்கு பெரும் தொழில் நிறுவன தலைமை அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.
ஜப்பான் பயணம்
இதனை அடுத்து நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து ஜப்பான் புறப்பட்டு சென்றார். ஜப்பான் சென்ற முதல்வரை அந்நாட்டு இந்திய தூதர் நிகிலேஷ் கிரி வரவேற்றார்.
சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்த்திடவும் சிங்கப்பூர் நாட்டில் தனது இரண்டு நாள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் நாட்டின் கான்சாய் விமான நிலையத்திற்கு வருகை தந்த மாண்புமிகு… pic.twitter.com/vxcDOFtT3Z
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 25, 2023
அங்கும், தொழில் நிறுவன தலைமை அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க உள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.