நான் பேசியதாக வெளியான ஆடியோ : விளக்கம் கொடுத்த பி.டி.ஆர்
ஆடியோ தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
பி.டி.ஆர் ஆடியோ விவகாரம்
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 26 நொடிகள் கொண்ட ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமைச்சர் எந்த பதிலும் அளிக்காத நிலையில், விளக்கம் அளிக்க வேண்டும் என பலரும் கூறியிருந்தனர்.

ட்விட்டரில் விளக்கம்
இந்த நிலையில் தனது ட்விட்டர் பதிவில் அந்த ஆடியோவை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தி, தனது ஆடியோ புனையப்பட்டுள்ளது என்பதை வட்டமிட்டு காட்டியுள்ளார். அதில், பல்வேறு ஆடியோக்களை கட் செய்து ஒட்டி வெளியிட்டிருப்பது நிரூபனமாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
My statement on the 26-second malicious fabricated audio clip pic.twitter.com/KM85dogIgh
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) April 22, 2023
மேலும், தி கிரேட் எஸ்கேப்' என்ற படத்தின் சிறிய வீடியோ வெளியிட்டிருப்பதாகவும், அதன் மூலம், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எடிட் செய்ய முடியும் என்பதை அறிந்துகொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த ஆடியோ தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.