மியான்மரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை - மத்திய அமைச்சர்

M K Stalin Narendra Modi Government Of India
By Thahir Sep 21, 2022 10:24 AM GMT
Report

மியான்மர் நாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முதரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்தியர்களை மீட்க நடவடிக்கை - அமைச்சர் 

இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்கள் சட்டவிரோதமாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதியிருந்தார்.

மியான்மரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் | Steps Taken To Rescue Stranded Indians In Myanmar

இந்த நிலையில் மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், மியான்மரில் உள்ள இந்தியர்கள் குறித்து நமது தூதர் வினய் குமாரிடம் பேசினோம்.

முன்னேற்றங்கள் குறித்து தூதர் என்னிடம் விவரித்தார், மேலும் இந்தியர்களை விரைவில் விடுவிக்க அனைத்து முயற்சிகளும் நடந்து வருவதாகத் தெரிவித்தார் என்று பதிவிட்டுள்ளார்.