சோழ வம்சத்து ராணி செம்பியன் மகாதேவி சிலை, அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
சோழ வம்சத்து ராணி செம்பியன் மகாதேவி உலோக சிலை, அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செம்பியன் மகாதேவி சிலை
செம்பியன் மகாதேவி சிலை சோழவ வம்சத்தைச் சார்ந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான உலக சிலை என்று சொல்லப்பட்டுள்ளது. பத்தாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சோழப் பேரரசர் கண்டராதித்தரின் பட்டத்தரசி செம்பியன் மகாதேவி சிலை இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் freer gallery of art அருங்காட்சியகத்தில் இருந்து செம்பியன் மகாதேவி உலக சிலையை தமிழகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நாகையில் உள்ளது போலி
நாகை கைலாசநாதர் கோவிலில் உள்ள செம்பியன் மகாதேவி சிலை போலியானது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சோழர்கால ஐம்பொன் சிலை 1929க்கு முன்பே சிலை திருடப்பட்டுள்ளது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் சிலையை மீட்டெடுக்கும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இறங்கியுள்ளது.