CSK-யில் மீண்டும் சொதப்பிய சஞ்சு சாம்சன்: பயிற்சியாளர் பிளெம்மிங் ஆதரவு குரல்

Chennai Super Kings Sanju Samson IPL 2026
By Sivaraj Apr 04, 2026 04:27 AM GMT
Report

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் 7 ரன்னில் அவுட் ஆன நிலையில், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் ஆதரவாக பேசியுள்ளார்.

நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன்

ஐபிஎல் 2026 சீஸனின் நேற்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது. 

Sanju Samson

கடந்த சீஸன் வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன், 2026 சீஸனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

முதல் போட்டியில் சொதப்பிய சஞ்சு சாம்சன், நேற்று நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

ஸ்டீபன் பிளெம்மிங் ஆதரவு

இது ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்த, சமூக ஊடகங்களில் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சஞ்சு சாம்சனின் பேட்டிங் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "சஞ்சு சாம்சன் எல்லா போட்டிகளிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற அவசியமில்லை. இது டி20 கிரிக்கெட்; அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

நன்றாக பயிற்சிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் சிறப்பாக ஆடும் தருணங்களில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்பவராகவே உள்ளார். இரண்டு இன்னிங்ஸ் அவரின் திறமையை தீர்மானித்து விடாது" என தெரிவித்துள்ளார்.   

Stephen Fleming