துபாய் ஆடுகளத்தில் தோனி தடுமாறினாரா? : விளக்கம் கொடுக்கும் பயிற்சியாளர் பிளெமிங்

csk ipl2021 delhicapitals stephenfleming
By Irumporai Oct 05, 2021 06:14 AM GMT
Report

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வென்றது. இதன் மூலம் பிளேஆஃப் சுற்றில் முதல் இரு இடங்களுக்குத் தகுதி பெறும் வாய்ப்பைக் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. இதில் ராயுடு 55 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் 27 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரியும் அடிக்காமல் 18 ரன்கள் எடுத்தார் தோனி. இந்த நிலையில் டெல்லிஅணி, 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

துபாய் ஆடுகளத்தில் தோனி  தடுமாறினாரா? :   விளக்கம் கொடுக்கும் பயிற்சியாளர் பிளெமிங் | Stephen Fleming On Ms Dhoni Delhi Capitals

இந்நிலையில் தோனியின் நேற்றைய ஆட்டத்தில் தடுமாற்றமான பேட்டிங் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. தோனிக்குப் பதிலாக ஜடேஜா முன்பே களமிறங்கியிருந்தால் சிஎஸ்கே அணி இன்னும் கூடுதலாக ரன்கள் எடுத்திருக்க வாய்ப்புண்டு எனப் பலரும் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து  சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் தனது கருத்தினை கூறுகையில்:

துபாயில் ஆடுகளத்தில் தோனி மட்டும் தடுமாறவில்லை. இயல்பாக ரன்கள் அடித்து ஆடுவதற்குக் கடினமாக இருந்ததாக கூறினார்.

மேலும் ,136 ரன்கள் எடுத்து வெற்றிக்கான இலக்கு இருந்த நிலையில்  தொடக்கத்தில் சில விக்கெட்டுகள் விழுந்ததால் இன்னிங்ஸைக் கட்டமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. 150 ரன்கள் எடுக்க இருந்தோம். ஆனால் கடைசி 5 ஓவர்களில் டெல்லி அணியினர் நன்றாகப் பந்து வீசினார்கள்.

எனவே எளிதாக ரன்கள் எடுக்க முடியவில்லை என கூறியுள்ளார்.