5 வயது சிறுமி; தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - தூக்கு தண்டனை!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை
கேரளா, பத்தினம்திட்டா என்ற பகுதியைச் சேர்ந்தவர் 5 வயது சிறுமி. இவரை அவரது வளர்ப்பு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 2021ல் சிறுமி உடலில் 67 காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், தாயாரின் இரண்டாவது கணவரான தமிழகத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (26) என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.
தூக்கு தண்டனை
உடனே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை, போக்சோ, உள்பட 16 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அபராதம் செலுத்தத் தவறினால், அது சட்டத்தின்படி வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.