கடைசி நேர சிக்கல்..? தள்ளிப்போகும் அயலான்..!! மீண்டு வருவாரா SK..?

Sivakarthikeyan Rakul Preet Singh Ayalaan
By Karthick Jan 11, 2024 10:39 AM GMT
Report

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ளது "அயலான்" படம்.

அயலான்

நீண்ட காலமாக தயாராகி வந்த சிவகார்த்திகேயனின் அயலான் படம் நாளை வெளியிட்டிற்கு தயாராகவுள்ளது.கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்த இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு என பலர் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

stay-order-against-sk-ayalaan-last-minute

2018-இல் துவங்கப்பட்ட இப்படம் ஆரம்பம் முதலே பெரும் பின்னடைவுகளை சந்தித்து வந்தது. 24 AM ஸ்டுடியோ சார்பில் ராஜா தயாரித்த இந்தப் படம் பின்னர் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கைவசம் மாறியது. இதற்கிடையில் கொரோனா பிரச்சனை போன்றவை தலைதூக்க, 5 ஆண்டுகள் கழித்து தற்போது வெளியிட தயாராகவுள்ளது.

கடைசி நேர சிக்கல்..?

இந்த சூழலில் தான் தற்போது கடைசி நேர சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது, 24 AM ஸ்டூடியோஸ் நிறுவனம், டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடம் 10 கோடி ரூபாய் கடனாக பெற்றிருந்தது. இந்தத் தொகைக்கு பொறுப்பேற்றுக் கொண்ட கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், 3 கோடி ரூபாய் மட்டுமே திருப்பி செலுத்தியது.

stay-order-against-sk-ayalaan-last-minute

இதனை அடிப்படையாக கொண்டு தான் படத்திற்கு தடைவிதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் படத்திற்கு தடைக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், படம் வெளியிட தடை இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.