அண்ணா சாலையில் கலைஞருக்கு சிலை - முதலமைச்சர் அறிவிப்பு!
Kalaignar
mkstalin
kalaignar89
statuekarunathi
By Irumporai
சென்னை அண்ணா சாலையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி சிலை மீண்டும் வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
இந்நிலையில் சென்னை அண்ணாசாலையில் ஏதாவது ஒரு இடத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திராவிட கழகத் தலைவர் வீரமணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் சட்ட வல்லுனர்களை ஆலோசித்து அண்ணாசாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் ஏற்கனவே பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோருக்கு சிலைகள் உள்ளன.