ராஜபக்ச சிலையை சுக்கு நூறாக உடைத்த சிங்கள மக்கள் - போர்க்களமாகும் இலங்கை
இலங்கையில் உள்ள டி.ஏ.ராஜபக்சவின் முழு உருவ சிலையை சிங்களர்கள் தகர்த்து நடுவீதியில் வீசி எறிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப அரசியல் ஒரு நாடு எப்படி சீரழிய முடியும்?.. ஆளும் அர்சுக்கு எதிராக மக்கள் கொதித்து எழுந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இப்போது இலங்கையில் நடக்கும் காட்சிகளே சாட்சிகளாக உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஆளும் அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பியுள்ளது.
அங்கு இலங்கை மக்கள் நடத்தி வரும் போராட்டத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது குடும்ப உறுப்பினர்களோடு திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இலங்கையில் ஆரம்பத்தில் இரண்டு கட்சிகள்தான் பிரதானமாக இருந்துள்ளது. ஒன்று ஐக்கிய தேசிய கட்சி, மற்றொன்று இலங்கை சுதந்திர கட்சி ஆகும்.
இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் பண்டாரநாயகாவின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் சிங்களம் மட்டுமே தேசிய மொழி, பவுத்தம் மட்டுமே தேசிய மதம் என இன, மத அரசியல் கூர்மைப்படுத்தப்பட்டது. இந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் மகிந்த ராஜபக்சவின் தந்தை டி.ஏ.ராஜபக்சே ஆவார். தந்தையின் மறைவுக்கு பின்னர் மகிந்த ராஜபக்ச அரசியலுக்கு வந்தார். அவர் 1970 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.
இந்நிலையில் கடும் கோபத்தில் உள்ள இலங்கை மக்கள் கோட்டாபய, மகிந்தாவின் தந்தை ராஜபக்சேவின் நினைவு ஸ்தூபியை உடைத்தெரிந்த மக்கள் சிலையையும் உடைத்து சுக்குநூறாக வீசினர்.