பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

periyar ponradhakrishnan
By Irumporai Sep 10, 2021 08:20 AM GMT
Report

திருச்சியில் பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை என பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் சிறுகனூரில் பெரியாருக்கு 100 கோடியில் 95 அடியில் சிலை வைக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அனுமதி அளித்தார்.

இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. திருச்சியில் பெரியாருக்கு சிலை வைக்கக்கூடாது என அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார் இந்த நிலையில், பெரியாருக்கு சிலை அமைப்பதில் தவறில்லை என பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் வடசேரி பகுதியில் விநாயகர் சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன். ராதாகிருஷ்ணன். பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை. மறைந்த தலைவர்கள் உடைய நல்ல கருத்துக்களை ஏற்று பின்பற்ற வேண்டும். வ உ சிதம்பரனாருக்கு சிலை மற்றும் மணிமண்டபம் குறித்து முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறினார்.

மேலும், கீழடியில் கிடைக்கும் ஆதாரங்கள் பெருமைக்குரிய ஒன்று. குமரி கண்டம் குறித்தும் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.