'' ராமானுஜர் சிலை சீன தயாரிப்பு'' இது தான் புதிய இந்தியாவா? பிரதமரை சாடும் ராகுல் காந்தி

rahulgandhi pmmodi statue china
By Irumporai Feb 09, 2022 09:34 AM GMT
Report

ஐதராபாத் சம்ஷாபாத் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் வைணவ ஆச்சாரியாரான ராமானுஜருக்கு 216 அடி உயர சிலைஅமைக்கப்பட்டுள்ளது. இதற்குசமத்துவ சிலை என பெயரிடப் பட்டுள்ளது.

ராமானுஜரின் 1000 ஆண்டுகள் பூர்த்தி ஆனதன் நினைவாக ரூ.1,200 கோடி செலவில், 45 ஏக்கர் பரப்பளவில் திரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆஸ்ரமவளாகத்தில் மிகவும் பிரம் மாண்டமான முறையில் சமத்துவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த சிலையை பிரதமர் மோடி கடந்த 5-ம் தேதி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்இந்த நிலையில் இந்த சிலை தொடர்பாக  ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் :

சமத்துவத்துக்கான சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய இந்தியா சீனா நிர்பார் (சீனா தயாரிப்பு) என மாறிவிட்டதோ' என கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தி ட்விட்டர் பதிவின் மூலம், சுயசார்பு இந்தியா திட்டமான ஆத்மநிர்பார் குறித்து அடிக்கடி பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.