அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜகவினருக்கு அருகதை கிடையாது - திருமாவளவன் காட்டம்

திருமாவளவன் பாஜக statue-of-ambedkar flower-garland ViduthalaiChiruthaigalKatchi அம்பேத்கர்சிலை காட்டம்
By Nandhini Apr 15, 2022 05:01 AM GMT
Report

அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் விழா தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் கொண்டாடப்பட்டன.

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

தமிழக சட்டபேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். இதனையடுத்து, நேற்று சமத்துவ நாளாக அம்பேத்கரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

பல்வேறு கட்சியினர், தொண்டர்கள், மக்கள் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதற்கிடையில், சென்னை கோயம்பேடு பேருந்துநிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு கட்சி தலைவர்கள் மாலை செலுத்தி மரியாதை செலுத்தி வந்தனர். அப்போது, பாஜக கட்சியினர் சார்பில் கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தன.

இதை அகற்றி விட்டு விடுதலை சிறுதைகள் கட்சியினர் தங்கள் கொடியை ஏற்றியதில் இரு கட்சியினருக்கும் மோதல் வெடித்தது. இதில் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர். இதனால் பாஜகவை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. 

இந்தச் செயலுக்கு பாஜகவினர் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க பாஜகவினருக்கு அருகதை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், புரட்சியாளர் அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைக்கு நேதெதிரான சனாதன கொள்கையைக் கொண்ட பாஜகவினருக்கு அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அருகதை இல்லை. இந்த நாடக அரசியலை மக்களிடம் அம்பலத்துவோம்’ என்று பதிவிட்டுள்ளார்.   

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜகவினருக்கு அருகதை கிடையாது - திருமாவளவன் காட்டம் | Statue Of Ambedkar Flower Garland V C K