இந்த மாநிலங்களில் இறைச்சி விற்பனைக்கு தடை வேண்டாம்

health food world eat
By Jon Jan 19, 2021 09:54 AM GMT
Report

பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லாத மாநிலங்களில் இருந்து பெறப்படும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டாம் என்று அம்மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த காய்ச்சல் பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த காய்ச்சல் பரவாமல் இருக்க பிற பகுதிகளில் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பறவைக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லாத மாநிலங்களில் இருந்து பெறப்படும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டாம் என்று அம்மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பறவை காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களின் பீதியை போக்க அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.