எல்லா மாநிலமும் தான் கடன் வாங்குறாங்க: செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் பேச்சு

tamil news press
By Jon Mar 02, 2021 02:04 PM GMT
Report

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், மக்களின் கோரிக்கைகள் ஒன்றொன்றாக நிறைவேற்றப்படுவதாக கூறினார். மேலும் ஏப்ரல் 1- முதல் மும்முனை மின்சாரம் அளிக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் அனைத்து மாநில அரசுகளும் கடன் வாங்கித்தான் நிர்வாகத்தை நடத்தி வருகின்றன.

எந்த மாநிலமும் கையில் பணத்தை வைத்துக்கொண்டு திட்டங்களை அறிவிப்பது இல்லை. வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்க வேண்டிய அவசியம் இருப்பதால் வாங்கப்படுகிறது. 2011ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்ததாக திமுக தலைவர் ஸ்டாலினே தெரிவித்திருக்கிறார். 10 ஆண்டுகளில் ஏறிய விலைவாசிக்கு ஏற்ப இப்போது ரூ.5.7 லட்சம் கோடி கடன் இருக்கிறது.

எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதை நிறைவேற்றிக் காட்டும் அரசு அதிமுக அரசு என பேசிய முதல்வர் அரசியலுக்காக டெண்டரில் முறைகேடு நடந்ததாக கூறி வருகிறார். அரசின் அறிவிப்புகளுக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார்.