திமுக மற்றும் அதிமுக அறிக்கையில் ஒத்துப்போகும் 8 அறிக்கைகள்

dmk aiadmk statement consistent
By Jon Mar 14, 2021 03:05 PM GMT
Report

திமுக மற்றும் அதிமுக அறிக்கையில் ஒத்துப்போகும் 8 அறிக்கைகள் பற்றி விரிவான விளக்கத்தை பார்போம். திமுக மற்றும் அதிமுக அறிக்கையில் ஒத்துப்போகும் 8 அறிக்கைகள் தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இதில் சில அம்சங்கள் இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் பொதுவாக இடம்பெற்றுன. அவை குறித்து தெரிந்துகொள்வோம். 1. மாணவர்களின் கல்விக் கடன் முழுவதும் தள்ளுபடி 2. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் 3. கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

4. தனியார் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை. 5. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் 6 தமிழை ஆட்சி மொழியாக்க, அலுவல் மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் 7. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் 8. கேபிள் டிவி சேவைக்கான கட்டணம் குறைக்கப்படும்