மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற விவகாரம் - நிர்மலா தேவி அளித்த பகீர் வாக்குமூலம்

Governor of Tamil Nadu Tamil Nadu Police
By Thahir Jan 24, 2023 08:04 AM GMT
Report

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயற்சி செய்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

சிபிசிஐடி நடத்திய விசாரணை 

இதை அடுத்து, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு சிபிசிஐடி தாக்கல் செய்த விசாரணை அறிக்கையை ஒரு தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

நிர்மலா தேவி அளித்த பகீர் வாக்குமூலம் 

அந்த அறிக்கையில், நிர்மலா தேவி அளித்த பகீர் வாக்குமூலங்களும் வெளியாகியுள்ளன. அதன்படி, உயர் அதிகாரிகள் என்பதை ஆளுநர் என்று நிர்மலா தேவி தவறாக புரிந்துகொண்டார்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற விவகாரம் - நிர்மலா தேவி அளித்த பகீர் வாக்குமூலம் | Statement Given By Nirmala Devi

தனது பதவி லாபத்திற்காக மட்டுமே மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல நிர்மலா தேவி திட்டமிட்டிருந்தார்.

இந்த வழக்கில் நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகிய 3பேர் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்கள். அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு இதில் தொடர்பு என்பது வெறும் கற்பனையே என்று நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.