எல்பிஜி சிலிண்டர் விலை: இந்தியாவிலேயே எந்த மாநிலத்தில் குறைவு?

Tamil nadu India LPG cylinder
By Vinoja Mar 15, 2026 11:02 AM GMT
Report

கடந்த சில தினங்களுன்ன முன்னர் 9 வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவதளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதில் குறிப்பாக,சவுதி அரேபியா, ஐக்கியஅரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய்வயல்கள் மீது ஈரான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்நடத்தி வருகிறது. இந்த போர் சூழல் காரணமாக பெரும்பாலான எண்ணெய்வயல்கள் மூடப்பட்டு உள்ளன.

எல்பிஜி சிலிண்டர் விலை: இந்தியாவிலேயே எந்த மாநிலத்தில் குறைவு? | State Wise Lpg Gas Prices In India

அதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் நேரடியாக எரிபொருள் மற்றும் எரிவாயு விலையிலும் தாக்கம் செலுத்தியுள்ளது.

இந்நிலையில், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி செலவுகள் காரணமாக, இந்தியாளவில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மார்ச் 12 ஆம் திகதி வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி  நாட்டின் முக்கிய நகரங்களில் சமையல் எரிவாயு விலை உச்சத்தை தொட்டுள்ளது. தகவல்களின் அடிப்படையில், எந்த மாநிலத்தில் எரிவாயு விலை குறைவாக உள்ளது எங்கு அதிகம் என்பது குறித்து பார்க்கலாம். 

எரிவாயு விலை

எல்பிஜி சிலிண்டர் விலை: இந்தியாவிலேயே எந்த மாநிலத்தில் குறைவு? | State Wise Lpg Gas Prices In India

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 928 ரூபாய் 50 காசுகளாக உள்ளது.

தலைநகர் டெல்லியைில் சமையல் பரிவாயு விலை 913 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே சண்டிகர் மாநிலத்தில்  தான் சமையல் எரிவாயுவின் மிகக் குறைவாக உள்ளது. அங்கு ஒரு சிலிண்டர் 862 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்தின் நொய்டா நகரில் 910 ரூபாய் 50  நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் 912 ரூபாய் 50 காசுகளாகவும் பதிவாகியுள்ளது.

ஏனைய  தென்னிந்திய நகரங்களுடன் ஒப்பிடும் போது, பெங்களூருவில் 915 ரூபாய் 50 காசுகளுக்கும், கேரளாவின் திருவனந்தபுரத்தில் 922 ரூபாய்க்கும் சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுகின்றது.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ஒரு சிலிண்டரின் விலை 965 ரூபாயாக உயர்ந்துள்ளதால், சென்னையை விட அங்கு விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாநிலங்களில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 916 ரூபாய் 50 காசுகளுக்கும், ஹரியானாவின் குர்கானில் 921 ரூபாய் 50 காசுகளுக்கும் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது.

கிழக்கு இந்தியாவில் கொல்கத்தா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் தலா 939 ரூபாய்க்கு சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது.

உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் 950 ரூபாய் 50 காசுகளாக விலை உள்ளது.

இந்த பட்டியலில்  மிக அதிகபட்சமாக பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் ஒரு சிலிண்டரின் விலை 1002 ரூபாய் 50 காசுகளைத் தொட்டுள்ளது.

1000 ரூபாயைக் கடந்து சிலிண்டர் விற்கப்படும் ஒரே முக்கிய நகரமாக பாட்னா உள்ளது. இந்த விலை உயர்வு நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மக்களை பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளது.