இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல் - ரணில் விக்ரமசிங்கே நடவடிக்கை
இலங்கையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இன்று முதல் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அதிபர் கோட்டபய ராஜபக்ச பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் எதிரொலியாக அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இததையடுத்து அதிபர் கோட்டபய ராஜபக்ச தப்பி சென்றார்.
இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராக பதவியேற்றார். கோட்டபய ராஜபக்ச பதவி விலகிய நிலையிலும் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவசர நிலை அமல்
இந்நிலையில் இலங்கையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இன்று முதல் மீண்டும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவின்பேரில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2வது பிரிவின் கீழ் இன்று (ஜூலை 18) முதல் இலங்கையில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.