மாநிலங்களவை தேர்தல் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

dmk CMMKStalin RajyaSabha
By Irumporai Sep 14, 2021 07:42 AM GMT
Report

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் இரண்டு திமுக வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

அதிமுகவின் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்ததால் காலியான இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் இரண்டு திமுக வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி, திமுக மருத்துவர் அணி மாநில செயலாளர் மருத்துவர் கனிமொழி மற்றும் நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என் ராஜேஷ் இருவரும் போட்டியிடுவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த மூத்த தலைவர் என்.வி.என் சோமு மகள் மருத்துவர் கனிமொழி ஆவார். இவர் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் மாதவரம் தொகுதியிலும், 2016 தேர்தலில் தி.நகர் தொகுதியிலும் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் போட்டியின்றி தேர்வாகிறார்கள் என்பதால், மாநிலங்களவையில் தி.மு.க. பலம் 10 ஆக உயர்ந்துள்ளது.