வீராங்கனை பிரியா மரணம் - மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு
Chennai
By Thahir
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
பிரியா மரணம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பிரியா மரணம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தர மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கர் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா இறந்த நிலையில், மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.