மக்களே முகக்கவசம் போடுங்க : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

COVID-19 Face Mask
By Irumporai Dec 22, 2022 09:53 AM GMT
Report

மக்கள் அனைவரும் பொது வெளிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளனர்.

மிரட்டும் கொரோனா

அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

மக்களே முகக்கவசம் போடுங்க : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் | State Governments Advise People To Wear Masks

இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று நாடாளுமன்றத்தில் கூறுகையில், மக்கள் அனைவரும் பொது வெளிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மாஸ்க் போடுங்க

ஆனால், இது கட்டாய உத்தரவு கிடையாது என்பதையும் நாடாளுமன்றத்தில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெளிவுபடுத்தினார். கொரோனா பரவுதல்களை மத்திய அரசு கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.