முதலமைச்சர் Vs ஆளுநர் அதிரடி எச்சரிக்கை யாருக்கு?

statecmvsgovernor keralachiefministervsgovernor
By Swetha Subash Feb 20, 2022 11:42 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

ஆளுநரை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.

இந்தியாவில் தமிழகம், மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மற்றும் ஆளுநர்களுக்கு இடையே அவ்வபோது மோதல் உருவாகி அது அம்மாநில அமைச்சரவையின் கருத்துக்களையும் பாதிக்கும் வண்ணம் உள்ளாகியது.

தமிழகத்தில் நீட் தேர்வு எதிர்ப்புக்கான மசோதா விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் , தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இவர்களுக்கு இடையே கருத்து மோதல் நிகழ்ந்தது.

அது போல மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவுக்கும் அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும் தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நிலவி சட்டப்பேரவை முடக்கம் வரை சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ''அரசாங்கத்தில் உள்ள யாருக்கும், கவர்னரை கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது,'' என கேரள மாநில ஆளுநர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது.

இங்கு, மாநில அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையில், தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில்,

நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கவர்னர் ஆரிப் முகமது கான், மாநில அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுவிக்கும் வகையில் , பேசியிருந்தார்.

கேரள ஆளுநர் பேசியது கேரள மாநில அரசை எச்சரிக்கும் விதமாகவா அல்லது ஒட்டு மொத்த மாநில அரசுக்கும் எச்சரிக்கையா என்ற கேள்வி எழுந்துள்ளது.